என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Friday, March 5, 2010

நீ. நான்.. நிலா...!!!

அலை ஒதுங்க கரை
நான் ஒதுங்க நீ!

நீ எங்கே
மறைந்து விட்டாய்?
ஏன் என்னை மறந்து விட்டாய்?

உயிரற்று மரணித்து இருக்கிறேன்
உயிர் தர வா
என் உயிரே!

இதயம் இயங்க மறுக்கிறது
உன் மூச்சு காற்று
என் மீது படாமல் இருப்பதால்;

பார்ப்பது எல்லாம்
உன்னை போல் இருக்கிறது
நீ மட்டும் விலகி நிற்கிறாய்;

கேட்பது எல்லாம்
உன் குரலாய் உணர்கிறேன்
நீ மௌனமாய் இருக்கிறாய்;

என் வானில் நீயற்று
இருள் சூழ்ந்துள்ளது
ஒளி கொடுக்க
வா என் நிலவே!
- கவித்தோழன்

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete