என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

பெண்களால்...தான்...உலகம்...!

முன்னூறு நாட்கள்
கருவறையில் எனை சுமந்து
அன்பின் மழை பொழிந்து
உயிர் கொடுப்பாள்
ஒரு தாயாக!


குறும்புத்தனமாய் சண்டைபோட்டு
விளையாட்டாய் போட்டிப்போட்டு
என்னை யவரிடமும்
விட்டுகொடுக்காத ஒரு தங்கையாக!


என் பெயரை
பிரபலப்படுத்தும் முதல் வானொலி!
என் இன்பதுன்பதிற்கு
துணை நிற்கும் தோழியாக!

கனவிலும்
கற்பனையிலும்
என்னுடன் வாழும்
காதலியாக!

என்னுடன்
தன் வாழ்வை ஒப்படைத்து
என்னை உயிராய் நினைக்கும்
மற்றொரு உயிரில் மனைவியாக!

தோற்றத்தில்
அன்னையின் உவமையாய் தெரிந்து
என்னை மனதில் ஹீரோவாக பாவிக்கும்
முதல் உறவில் மகளாக!

- இது என் வாழ்க்கைப்பயணத்தில் நான் சந்தித்த பெண்களை பற்றியது.

-நட்புடன்........கவித்தோழன்