என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Wednesday, October 19, 2011

தேர்தல் 'மங்காத்தா' - ஒரு தேர்தல் நடந்து முடிந்தது..!


பொள்ளாச்சி ஐயோ (ஒலிபெருக்கியில் அப்பாடி தாங்க சில நேரம் கேக்குது ) உள்ளாட்சி தேர்தல் தான் நாம கடந்த சில நாட்களாக கொண்டாடிய அட்வான்ஸ் தீபாவளி...!

வாக்காள பெருமக்களே,வாக்காள வள்ளல்களே..! அதையும் மீறி சில பேர்
கொடுத்த காசுக்கு மேல் கூவுனா வாக்காள கடவுள்களே..! (இது தான் வோட்ட போட்டு அஞ்சு வருஷம் வாய முடி சும்மா இருக்கும் மக்களின் தேர்தல் சீசன் பெயர்கள் )

இருபது தெரு மட்டுமே நிக்கும் மெம்பர் கூட நாற்பது பாயிண்டு தேர்தல் அறிக்கை எழுதி அச்சிட்டு கொடுக்கறாங்க...

இந்த தேர்தலில் ஒரு அபூர்வ அறிக்கை ஒன்னு படிச்சேன் மக்களுக்கு இயற்கையின் வளமான சுத்தமான குடிநீர் (அது இபோ பூமிலேயே கிடையாது ),சுத்தமான காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் கூடிய வீடு கட்டி கொடுக்க படும்...(விடறதுக்கு ஒரு அளவே இல்லாம இயற்கைய கூட கூட்டுக்கு குபிட்றாங்க)

எப்டியும் எதாச்சும் கொடுத்தா கண்டிப்பா நமக்கு தான் வோட்டு போடுவான்னு
எல்லா கட்சி காரங்களும்(சரக்கு,முறுக்கு, சைடு டிஷ் பிரியாணி ) என பலவாறு
கவனித்தார்கள்...

இதுல நம்ம ஆளுங்க கொஞ்சம் உஷார்.. எல்லாரிடமும் போய் முடிந்த அளவு எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ அவ்ளோ ஆட்டைய போட்டாங்க..!

கடைசி நேர பிரச்சாரம் தான் ஹைலைட்..!

எவன் யாருக்கு வோட்டு கேக்குறான்னு மக்கள்கு குழப்பம் வர அளவுக்கு
எல்லாரும் ஒரே இடத்தில் குழுமி கும்மியடித்தார்கள் (சாரி பாஸ்) வோட்டு கேட்டார்கள்..!

பிரசாரம் முடிஞ்சுருச்சு ... அடுத்தது என்ன ?

நேத்து வேலையிருந்தவன் கூட வீடு விட்டு வெளிய போல காரணம் என்ன தெரியுமா?

அவன் போன நேரத்துல எந்த கட்சி காரனாச்சும் வந்து காசு கொடுக்க இவன் இல்லாம போய்ட்டா ...அவனா மனசார கொடுக்றதும் கெட்டுவிடுமே (மிக பெரிய ஜனநாயக எண்ணம் இது )

எங்க வார்டுல ஆளுங்கட்சி,எதிர்கட்சி, ஆண்ட எதிர்க்கட்சி,பழ கட்சி என ஏழு பேரு போட்டியிட்டாங்க..!

இதுல ஆண்ட எதிர்கட்சி தான் இங்க அதிகமா தேர்தல் பாசனம் பாச்சுனாங்க..!

மற்ற மூணு கட்சி அண்டு ஒரு சுயட்சை னு எங்க ஏரியாவுல ஆளுக்கு சுமார்
ஆயிரம்(ஏன் என்றால் எல்லாருக்கும் கொடுக்காம தேர்ந்தெடுத்து சிலருக்கு மட்டும் கொடுத்ததால் இந்த அமௌன்ட்)

வோட்டுக்கு பணம் வாங்குவது தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக்கொள்வதர்க்கு சமம் என நான் நினைப்பதாலா? இல்ல,இவன் ஒரு வோட்டு முக்கியமில்லைனு விட்டுட்டாங்களான்னு தெர்ல (உபயம் - என் அம்மா பாரின் போயிருக்காங்க)வீட்டில் இப்போ என் வோட்டு மட்டும் தான்.நமக்கு மட்டும் பாசனத்தில் ஒரு பகுதியும் வரவில்லை( மிக்க மகிழ்ச்சி ..ஏன் என கீழே சொல்றேன்).

இன்று காலை நடந்த சம்பவம்...!

என்னோட பூத் ஸ்லிப் யாரோ எடுத்துகிட்டாங்க...

எங்களுக்கு கடந்த வருடமா தெரிந்தவரும் ஒரு வேட்பாளர் தான் ....

நான் பூத்கு போறதுக்கு முன்னாடி அவரிடம் போய் என் பூத் ஸ்லிப் நம்பர் வாங்கிட்டு பூத்துக்கு போனேன்.

போகும் வழியெங்கும்....

வோட்டு கேட்டு வேட்பாளர்கள் (மினி அண்டு ஸ்பாட் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள் )

எல்லார்டையும் கைய காமிச்சிட்டு ...

லைன்ல நின்னு வோட்டை போட்டேன்...!

யார்ட்டையும் காசு வாங்காததால நமக்கு ஏற்படாமல் போன விஷயம்...

இன்று பலருக்கும் அரங்கேறியது...

அது என்னவா இருக்கும் கீழ இருக்கும் வீடியோ பாத்து தெரிஞ்சிகோங்க..!

http://www.youtube.com/watch?v=O4CeSLtFetc

இந்த தேர்தலில் யார் குழம்பி போனார்களோ இல்லையோ எல்லார்டையும் காசு வாங்கிட்டு யாருக்கு வோட்டு போடறது ... இவன் கிட்ட வாங்கிட்டு இவனுக்கு போடாம விட்ட நாளைக்கு தெருல நின்னு கத்துவானே...அதுவே பெண்களா இருந்தா மானாவாரியா மண்ணு அள்ளி வீசுவாங்க...என்ன நடக்குமோ னு காச
வாங்கிட்டு தூக்கத்துல கனவு வேட்பாளர் திட்ற மாறியே பீல் பண்ற நம் வாக்காள கடவுள்கள் தான்..!

இவ்ளோ காசு வாங்கியும் ..சிலர் வாங்காமலும் வோட்டு போடாமல் வீட்டில்
இருந்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ....

தலயோட சிட்டிசன் படத்துல கடசில அந்த மூணு பேருக்கும் கொடுக்கணும்னு தல சொல்ற தீர்ப்பு தான் ...!

எவன் லாம் வோட்டு போடலையோ அவனோட குடிஉரிமைய புடிங்கிடலாம்...!

இத்துடன்

இன்று முடிந்து ...காலமும் காலனும் அனுமதித்தால் நாளை சந்திக்கலாம்...

விரைவில் .... வெட்டு குத்து வெள்ளிகிழமை...!

என்னாட இவன் தேர்தல் மங்காத்தா னு தலைப்பு வச்சிருக்கானே னு நினைத்தவர்களுக்கு ...

மங்காத்தா படத்துல கூட தான் கடைசி சீன்ல அர்ஜுன் சொல்வாரு 'நான் உள்ளே நீ வெளியே' னு அத படம் ஆரம்பிச்ச உடனே காமிச்சிருந்தா படம் பப்படம் ஆகிருக்கும் அது போல தேர்தல் னு சொன்னாலே , பதவிக்கு 'ஒரு ஆள் உள்ளே , ஒரு ஆள் வெளியே " அதானே அர்த்தம்.


நட்புடன் ..கவித்தோழன்

1 comment:

  1. தோழரே
    நல்லா இருக்கு... தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete