என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Monday, January 9, 2012

புயல் நிவாரண பணத்தை சுருட்டும் கும்பல்...!

புயல் நிவாரண பணத்தை சுருட்டும் கும்பல்...!

சமீபத்தில் வீசிய தானே புயலால் நாசமான நகரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நகரமும் ஒன்று.

புயல் நிவாரண பணமாக,தமிழக அரசாணையில் ரேஷன் கார்டுக்கு ரூ.2500/- கொடுக்கப்படுகிறது.

இந்த பணத்தில் நூதன திருட்டு நடைபெறுகிறது.

பெரும்பாலும் ரேசன் கார்டு வைத்திருப்போர் வாடகை வீட்டில் வசிப்பதால்.அவர்களை நிவாரண பணம் வாங்க கொடுக்க படும் டோக்கன் வாங்க வரிசையில் நிக்க சொல்லி அந்த டோக்கனை அவர்களிடம் இருந்து
பிடுங்கி தன் வசம் ஆக்குகிறது இங்கே இருக்கும் வீட்டு ஒனர்களின் கும்பல்.

ரேசன் கார்டு விதமாய் பணம் கொடுக்கபட்டாலும் அது பெரும்பாலும்,அடுத்த எலெக்சன் வரும் வரை நிகழ்கால ராஜாவாய் அலையும் தற்காலிக கவுன்சிலர் குடும்பத்தால் மொத்தமாக
சுருட்டப்படுகிறது.

அவர்களுக்கு சொந்தமாய் ஒரு கீத்து வீடு இருந்தாலும் அதற்கும் ஒரு வீடு கணக்காய் பணம் எடுத்து கொள்கிறார்கள் அவர்கள்.

நிவாரண பணம் எல்லோரையும் சென்றடையாமல் இருந்தாலும் பரவா இல்லை.இல்லாதவர்களுக்கும் கொடுக்க பட்ட பணத்தில் தான் இந்த சுருட்டல் நடைபெறுகிறது.

தலாரிக்கும்,கவுன்சிலர்களுக்கும் பொங்கல் போனஸ் ஆக கிடைத்த பணம் தான் இந்த புயல் நிவாரண நிதி.

இது புயல் வீசி அழிந்த அனைத்து ஏரியாவிலும் அல்ல கிடைத்த பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தும் அட்டூழிய அரசியல்வாதிகள்.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க வுக்கு கிடைத்த மாபெரும் தோல்விக்கு ஒரே காரணம் அராஜகமும் ஊழலும் தான் என்பதை எந்த அரசியல்வாதியும் மறந்து விடக்கூடாது.